தேசிய மட்ட ஆங்கில தின போட்டியில் மஹ்மூத் மாணவி எம்.ஆர். ஆயிஷா மூன்றாம் நிலை பெற்று சாதனை.
தேசிய மட்ட ஆங்கில தின போட்டியில் மஹ்மூத் மாணவி எம்.ஆர். ஆயிஷா மூன்றாம் நிலை பெற்று சாதனை.
பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட ஆங்கில தின நிகழ்ச்சிகளில் மஹ்மூத் மாணவிகள் அண்மையில் பங்கேற்று இருந்தனர்.
இந்நிகழ்வில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) சார்பாக தரம் 11 சேர்ந்த எம்.ஆர். ஆயிஷா Oratory (Impromptu) போட்டியில் தேசிய ரீதியில்
மூன்றாம் நிலையினைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தேசிய மட்ட ஆங்கில தின போட்டி நிகழ்ச்சிக்கு மாணவிகளை திறம்படவழிப்படுத்திய ஆங்கில பாட இணைப்பாளர் Mrs.F. Nasrina Risath, ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு இப் பொன்னான சந்தர்ப்பத்தில் கல்லூரி அதிபர் ஹாஜியானி. எஸ்.எஸ்.எம். மசூதுலெப்பை அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வதோடு பிரதி, உதவி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள்
அனைவரும் பாடசாலை சமூகம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Mahmood student Zuhra Nadtha participates in the International Climate and Democracy Conference in Germany
Mahmood student Zuhra Nadtha participates in the International Climate and Democracy Conference in Germany
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தரம் 11ல் கல்வி கற்கும் மாணவி பாத்திமா ஷுஹ்ரா நதா கடந்த செப்டம்பர் மாதம் KNH அமைப்பினால் ஜெர்மனியின் டஸல்டோர்ப் (Düsseldorf ) நகரில் ஒழுங்கு செய்யப்பட்ட மாணவர்களுக்கான சர்வதேச காலநிலை மற்றும் ஜனநாயகம் மகாநாட்டில் கலந்து சிறப்பித்தன் மூலம் தனது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இலங்கை ஒன்றியம் (Sri Lanka Unites) மூலமாக இலங்கையிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மூன்று பாடசாலை மாணவிகளுடன் தென்ஆபிரிக்கா மற்றும் ஜேர்மனியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.
இரு வாரங்களாக சஜேர்மனியின் டஸல்டோர்ப்(Düsseldorf), டுஸ்பேர்க்(Würzburg) மற்றும் தலைநகரான பெர்லின்(Berlin)நகரங்களில் நடைபெற்ற காலநிலை தொடர்பான சர்வதேச பாடசாலைகளுக்கிடையிலான அறிவுப்பரிமாற்ற நிகழ்வுகளிலும் இவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவிகளுக்கு அதிபர் அவர்களினால் விடுக்கும் வாழ்த்து செய்தி
உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவிகளுக்கு அதிபர் அவர்களினால் விடுக்கும் வாழ்த்து செய்தி
3rd term examination will be held on 8th of December
3rd term examination will be held on 8th of December