கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி பாடசாலைக் கீதம்.
சிரம் பணிந்திறை பதம் தினம் தொழுவோமே
சீர் கலை யாம் பெறுவோமே
அரியநம் மகளிர் கலைத் தலம் உயர
ஆதியை தினம் துதிப்போமே
ஜெயமே ஜெயமே ஜெயமே
ஜெய ஜெய ஜெய ஜெயமே
சீர் கலையாம் பெறுவோமே
மாதர் குலம் எதிர்காலம் சிறந்து
மாசறு வாழ்வு சிறந்து
ஓதிய மாதென ஒளி பெற வாழ்ந்து உயரறம் இதுவெனச் சூழ்ந்து
உண்மையை ஓதிடுவோமே
நன்மையை தேடிடுவோமே
தின்மையைத் தீர்த்திடுவோமே
ஜெயமே ஜெயமே ஜெயமே
ஜெய ஜெய ஜெய ஜெயமே சீர் கலை யாம் பெறுவோமே
பேர் மஹ்மூது பெண் மாகலைக் கூடம்
பெருகிய சிறுமியர் பாடம்
ஆர்வமடோதினர் ஞாலம் விளங்க அனுதினம் உளமது துலங்க
அறிவொளி பெருகிடுவோமே
அறநெறி மருவிடுவோமே
அமலனைப் புரிந்திடுவோமே
ஜெயமே ஜெயமே ஜெயமே
ஜெய ஜெய ஜெய ஜெயமே சீர் கலை யாம் பெறுவோமே
புலவர்மணி அல்-ஹாஜ் ஆ.மு.சரிபுத்தீன்






