மஹ்மூத் மாணவி எம்.ஆர். ஆயிஷா மூன்றாம் நிலை பெற்று சாதனை
பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட ஆங்கில தின நிகழ்ச்சிகளில் மஹ்மூத் மாணவிகள் அண்மையில் பங்கேற்று இருந்தனர்.
இந்நிகழ்வில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) சார்பாக தரம் 11 சேர்ந்த எம்.ஆர். ஆயிஷா Oratory (Impromptu) போட்டியில் தேசிய ரீதியில்
மூன்றாம் நிலையினைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தேசிய மட்ட ஆங்கில தின போட்டி நிகழ்ச்சிக்கு மாணவிகளை திறம்படவழிப்படுத்திய ஆங்கில பாட இணைப்பாளர் Mrs.F. Nasrina Risath, ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு இப் பொன்னான சந்தர்ப்பத்தில் கல்லூரி அதிபர் ஹாஜியானி. எஸ்.எஸ்.எம். மசூதுலெப்பை அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வதோடு பிரதி, உதவி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள்
அனைவரும் பாடசாலை சமூகம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.






